10, 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் - தமிழக அரசு!

10, 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

10, 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் - தமிழக அரசு!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 10, 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தனி மனித இடைவெளிவிட்டு தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்து எழுதவேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது. மேலும் தேர்வறைகளில்  தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.