ஆட்சி மாற்றம் வந்தால் இது போன்ற ரெய்டுகள் நடப்பது வழக்கம் தான்..செங்கோட்டையன்.!!

ஆட்சி மாற்றம் வந்தால் இது போன்ற ரெய்டுகள் நடப்பது வழக்கம் தான் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் வந்தால் இது போன்ற ரெய்டுகள் நடப்பது வழக்கம் தான்..செங்கோட்டையன்.!!

தருமபுரி மாவட்ட், காரிமங்கலம் எடுத்த கெரகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  இன்று  அதிகாலை முதல் தொடர்ந்து சோதனை நடத்தினர். அப்போது  அங்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன்,கே.சி.கருப்பண்ணன், பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் அங்கு வந்தனர்.   

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,  முன்னாள் அமைச்சர் அன்பழகன் சிறந்த முறையில் களப்பணியாற்றக்கூடியவர், தொடர்ந்து 5 முறை பாலக்கோடு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள, 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,கூட்டணி வெற்றிபெற உழைத்தார் என்றும்  ஆட்சி மாற்றம்  ஏற்படும்போது இது போன்று ரெய்டுகள் நடப்பது வழக்கம் தான்,நீதிமன்ற மூலம் அவர்  இந்த வழக்கில் இருந்து வெளியே வந்து தன்னை நிரபராதி என நிருபிப்பார். மேலும் இந்த ரெய்டால் உள்ளாட்சி தேர்தல் தங்களை பாதிக்காது என கூறினார்.