கோடை விடுமுறை.. சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றலாப் பயணிகள்!!

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் கோடை சுற்றலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கோடை விடுமுறை.. சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றலாப் பயணிகள்!!

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் குற்றால சீசன் தொடங்கும் நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதனால் அங்கு குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல்மழை பெய்து கொண்டே உள்ளது.

மேலும் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவருகிறது.

இந்நிலையில், அங்கு நிகழும் குளுகுளு சீசனை காணவும், அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலிலும் இந்தாண்டு முன்கூட்டியே கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் வரும் 24ம் தேதி அங்கு, கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

இதனால்  சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், வார விடுமுறை காரணமாக அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.