சூரியனின் கோரத்தாண்டவம் சற்றே குறைந்தது...!

சூரியனின் கோரத்தாண்டவம் சற்றே குறைந்தது...!

தமிழ்நாட்டில் 5 இடங்களில் இன்று சதம் அடித்த வெயில் - ஏறுமுகமாக இருந்த வெயிலின் தாக்கம் தற்போது இறங்கு முகமாக மாறி வருகிறது....

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வரக்கூடிய நிலையில் தற்போது அந்த வெயிலின் கோரத்தாண்டவம் என்பது சற்றே குறைய தொடங்கியுள்ளது.

Alert Heat Temperature Increasing In Tamil Nadu | இயல்பை விட அதிகாரிக்கும்  வெப்பநிலை! மக்கள் எச்சரிக்கை! | Tamil Nadu News in Tamil

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்த வெயிலின் தாக்கமானது தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதையும் படிக்க    } வேண்டாம் ஆபத்து...! சிறுநீரகத்தை பாதிக்கும் குளிர்பானங்கள்..!

அந்த வகையில் இன்று ஈரோட்டில் 100.76°F, கரூர் பரமத்தி 101.30°F, திருச்சி 101.30°F, வேலூர் 101.48°F, மதுரை நகரத்தில் 101.12°F  வெப்பம் பதிவாகி இருக்கக்கூடிய நிலையில், குறைந்தபட்சமாக உதக மண்டலத்தில் 66.20°F வெப்பம் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க    } பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்!