'Swiggy' ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்...பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ஊழியர்கள்!

'Swiggy' ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்...பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ஊழியர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி Swiggy ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பின் தொடர்ந்து, பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Swiggy  ஊழியர்களும் இன்றைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். 

இதையும் படிக்க : பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்...தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

இந்நிலையில், புதிய ஸ்லாட் முறையை திரும்ப பெற வேண்டும், ஏற்கனவே வழங்கி வந்த Turn Over தொகையை மீண்டும் வழங்க வேண்டும், ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும், ஆர்டர் ஒன்றுக்கு குறைந்தபட்டம் 30 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி Swiggy ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.