21 நாட்களாக போக்குகாட்டி வந்த டி23 புலி உயிருடன் பிடிப்பட்டது...

நீலகிரியில் 21 நாட்களாக போக்குகாட்டி வந்த T23 புலிக்கு , மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

21 நாட்களாக போக்குகாட்டி வந்த டி23 புலி உயிருடன் பிடிப்பட்டது...

கடந்த 20 நாட்களாக ஒட்டுமொத்த வனத்துறையினருக்கும் சிக்காமல் போக்கு காட்டி வந்த T 23 புலிக்கு, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் வைத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டும் T 23 புலி வனத்துறையிடம் இருந்து தப்பியுள்ளது. இதனையடுத்து, இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர், இதுவரை புலி சிக்காததால் மீண்டும் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் புலியை தேடினர்.

இந்நிலையில்,  முதுமலை செல்லக்கூடிய வன சோதனை சாவடி அருகே அந்த புலி சர்வ சாதாரணமாக சாலையைக் கடந்து சென்றுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத வனத்துறையினர்  புலியை பிடிக்க விரைந்தனர்.  இந்த நிலையில் 21 நாட்களாக போக்குகாட்டி வந்த டி23 புலியை 2முறை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்துள்ளனர்.