டாஸ்மாக் திறப்பு...  மது விலை உயர்வு! வயிற்றெரிச்சலில் குடிமகன்கள்... 

தளர்வுகளோடு நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் ஊரடங்கில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை நேரம் குறைத்து திறப்பது என முடிவெடுத்துள்ளதாம் அரசு, அதுமட்டுமல்ல சரக்கு விலையும் உயர்த்தவுள்ளதாம்.

டாஸ்மாக் திறப்பு...  மது விலை உயர்வு! வயிற்றெரிச்சலில் குடிமகன்கள்... 
தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியோடு முடிவையும் நிலையில், அடுத்து ஒருவார காலம் தளர்வுகளோடு ஊரடங்கு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மேலும் தளர்வுகளோடு நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் ஊரடங்கில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை நேரம் குறைத்து திறப்பது என முடிவெடுத்துள்ளதாம் அரசு, அதுமட்டுமல்ல சரக்கு விலையும் உயர்த்தவுள்ளதாம்.
 
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களுக்குச் சென்று மது வகைகளை வாங்கிக் குடிக்கின்றனர் நம்ம ஊரு குடிகாரமக்கள். சில அரை போதைகள் எவ்வளவு விலைக்கு விற்றாலும் வாங்கிக்குடிக்கிறார்கள். ஸீபத்த்தில் கூட உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் ஊழியருடைய டூவிலரில் கர்நாடக மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நடந்தது. அதேநேரம் எவ்வளவு விலை கொடுத்தும் மதுவை வாங்கிக் குடிக்க பலர் தயாராக இருப்பதால் ஒரு புல் பாட்டில் 3000 ரூபாய் வரை வாங்கிக்குடிக்கிறார்கள். 
 
ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு வருடமாக மது கொள்முதல் குறைந்துவிட்டது. டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கி ப்ளாக் மார்க்கெட்டில் விற்பவர்கள்தான் அதிகரித்துள்ளனர். அதனால் அரசு மது கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்’ என்று ஆட்சி மேலிடத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்களாம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் மதுபான ஆலை உரிமையாளர்கள். இதை பரிசீலித்து அரசும் டாஸ்மாக் மதுபான கொள் முதல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாம். எனவே மது ஆலைகளுக்குக் கொடுக்கும் கொள்முதல் விலையை அரசு உயர்த்தினால் தானாகவே டாஸ்மாக்கில் சரக்கு விலையும் உயரும்.
 
எனவே அடுத்த கட்ட ஊரடங்குத் தளர்வில் டாஸ்மாக் திறப்பு என்ற முடிவெடுக்கப்படும் அதேநேரம், மது பான விலைகளையும் குறிப்பிட்ட அளவு உயர்த்த அரசு முடிவெடுத்திருக்கிறது. எனவே விரைவில் டாஸ்மாக் திறப்பு குஷியாக இருந்தாலும், மது பான விலைகள் அதிகரிப்பு செய்தியும் குடிமகன்களுக்கு வயிற்றெரிச்சலை கொடுக்கும்.