புடிங்க சார் புடிச்சி ஜெயில போடுங்க களத்தில் இறங்கிய ஆட்சியர்.. வீடு தேடி வந்த பணம்!

மதுரையில் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார் மீது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

புடிங்க சார் புடிச்சி ஜெயில போடுங்க களத்தில் இறங்கிய ஆட்சியர்.. வீடு தேடி வந்த பணம்!

மதுரை  மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார் மீது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள்  அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகம் வசூலிப்பதை தொடர்ந்து இதனை தடுக்க தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசு முயன்று வருகிறது. தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் மாற்றும்  தனியார் மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு இவ்வளவு கட்டணம் என்று தமிழக அரசு தனி தனி கட்டணங்களை விதித்துள்ளன. 

இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவும் போடப்பட்டது . ஆனாலும் ஒரு சில மருத்துவமனைகள் அரசுக்கு தெரியாமல் கட்டண கொள்ளையில் ஈடுப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து  மதுரை  தனியார் மருத்துவமனை ஒன்றில் கட்டண ம் அதிகம் வசூலிக்க படுவதாக புகார் எழுந்தது. மே 12 மருத்துவமனையில் சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் 2 நாள் மட்டுமே அங்கு சிகிச்சை எடுத்த நிலையில் மே 14 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து  நோயாளியிடம் இந்த 2 நாள் சிகிச்சைக்காக 1. 3 லட்சம் ரூபாய் கட்டணம் வாசுலிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்  மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து  உடனே மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் உடனே விசாரணை தொடங்கினார். 

விசாரணையில் அந்த தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பெயரில் 66 ஆயிரம் ரூபாய்பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு மீண்டும் திருப்பி அளிக்கப்பட்டது. இதனை  அடுத்து அந்த மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.