உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுங்கள்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு...

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் ஏலம் விடப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுங்கள்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு...

 தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், மற்றும் ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள  உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் 6  மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் துவங்கிய நிலையில், சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் ஏலம் விடப்படுவதாக செய்தி வெளியானது. 

இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்துக்கும், மக்களாட்சி தத்துவத்துக்கும் விரோதமாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை ஏலம் விடுவது கண்டிக்கத்தக்கது என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,
ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏலம் விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.