முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்...

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்...
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை வரும் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையும், 16ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். 
 
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கான அனுமதி, நிதிநிலை அறிக்கைக்கு மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்குக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.