தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு :  டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.4.35 லட்சம் அபராதம்!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு :  டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.4.35 லட்சம் அபராதம்!!

டிசம்பர் மாதத்தில் மட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு கண்டறியப்பட்டு, 4 லட்சத்து 35 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை மாநகராட்சி பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறது.  அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்தாயிரத்து 759 இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு கண்டறியப்பட்டு, 4 லட்சத்து 35 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.