பண்டிகை காலங்களில் மக்களுக்கு சுமை கொடுக்கவே ஆவின் நெய் வெண்ணெய் விலையை தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது - ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் ரபேல் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது

பண்டிகை காலங்களில் மக்களுக்கு சுமை கொடுக்கவே ஆவின் நெய் வெண்ணெய் விலையை தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது -  ஜி.கே.வாசன்

சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கு திமுக அரசு 

இந்த விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசானது, சிறுபான்மையினரை பிரதிபலிக்க கூடிய அரசாக செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | அன்புள்ள அப்பா அப்பா!!!!! அப்பாவை அடித்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் கழுத்தை கத்தியால் கிழித்தும் மகன் கலவரம்

தமிழக அரசு  ஏழை, எளிய  மற்றும் நடுத்தர மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றாத அரசாக செயல்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு மாதத்தில் பால் விலை உயர்வு வெண்ணெய் மற்றும் நெய் விலை உயர்வு என சாதாரண மக்களின் வயிற்றிலே அடிக்கக்கூடிய நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மக்களுக்கு சுமை

பால், நெய், வெண்ணெய் விலையை குறைப்பது மட்டுமல்லாமல் உடனே நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், பண்டிகை காலங்களில் மக்களுக்கு சுமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மக்கள் என மக்களின் மீது சுமையை ஏற்றிய அரசாக மக்களிடம் பெயர் பெற்று வருகிறது. இது தொடர்ந்தால் வரும்காலங்களில் மக்களின் எதிர்மறை ஓட்டை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்