ஜல்லிக்கட்டுப்போட்டியில் இது ரொம்ப முக்கியம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ஜல்லிக்கட்டுப்போட்டியில் இது ரொம்ப முக்கியம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை மீறினால் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ முக்கியம்:

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கால்நடை வதைத்தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துபவர்களுக்கு மட்டுமே மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கான காளை வருவதில் இருந்து, போட்டி முடிந்து செல்லும் வரை வீடியோ படம் எடுக்கப்பட வேண்டும் எனவும், அரசு பட்டியலிட்ட இடங்களில் மட்டுமே போட்டி நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை: தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிறுத்தம்! - போராட்டத்தில்  இறங்கிய பொதுமக்கள் | tachankuruchi jallikattu stopped by the pudukottai  district administration due ...

இதையும் படிக்க: ஹாரியின் சட்டை காலரை பிடித்து கீழே தள்ளிய வில்லியம்ஸ் - ஹாரியின் சுயசரிதையில் புதைந்துள்ள ரகசியம்

கொரோனா தடுப்பூசி:

ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விதிகளின்படி விளையாட்டு நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், காளையின் உரிமையாளரும் உதவியாளரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதோடு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jallikattu - Wikipedia

கொரோனா பரிசோதனை கட்டாயம்:

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விளையாட்டுகளில் 300 வீரர்களும் எருது விடும் விழாவுக்கு 150 வீரர்களும் பங்கேற்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பார்வையாளர்கள் பகுதியில் உள்ள இருக்கையின் எண்ணிக்கைக்கு பாதி பேர் அனுமதிக்கப்படலாம் எனவும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.