தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்..! அனைவரும் வைக்கும் ஒரே கோரிக்கை..!

56,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை..!

தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்..! அனைவரும் வைக்கும் ஒரே கோரிக்கை..!

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு:

சென்னை அண்ணா சாலையில் மின்வாரிய துறையின் பிரதான நுழைவாயிலை மூடி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனத்தை கைவிட வேண்டும், தனியார் மயமாக்கலை ரத்து  செய்ய வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு, முள்ளு:

தமிழ்நாடு மின்வாரிய பாட்டாளி தொழிற்சங்கம் , மின்வாரிய அனைத்து பணியாளர் பொறியாளர் சங்கம் என 7 தொழிற்சங்க பிரதிநிதிகள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது இருத்தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.   

போராட்டம் தொடரும்:

இதேபோல் சேலத்தில் மின்வாரிய ஊழியர்கள், வேலையை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்யப்படும் அரசாணை திரும்ப பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும்:

கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும், 56,000 காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மின்வாரிய ஆணை எண் இரண்டை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

அனல் நிலையம் முன்பு போராட்டம்:

தூத்துக்குடி அனல் நிலையம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.