தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளியை நடத்தும் திருச்சபை விளக்கம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அப்பள்ளியை நடத்தி வரும் தூய  இதய மரியன்னை சபையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளியை நடத்தும் திருச்சபை விளக்கம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அப்பள்ளியை நடத்தி வரும் தூய  இதய மரியன்னை சபையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட பள்ளியானது 160 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு சமயச்சார்பற்ற கல்வி அளிப்பது மட்டுமல்லாது, அவர்களது மத நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவியின் வாக்குமூலத்தில்,  விடுதி காப்பாளர் மீது குற்றம் சுமத்தியிருப்பதாகவும், காவல்துறையின் முறையான விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  

ஆனால் இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்கி வருவதாகவும், இதனால் தங்களது பணிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், இத்தகையை செய்கையை தவிர்க்கும்படியும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.