தூரிகை பயன்படுத்தாமல் தன் உடலையே தூரிகையாக்கி..! உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்து ஆசிரியர் சாதனை...!

தூரிகை பயன்படுத்தாமல் தன் உடலையே தூரிகையாக்கி..! உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்து ஆசிரியர் சாதனை...!

தன் உடலையே தூரிகையாக பயன்படுத்தி, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவத்தை  வரைந்து அசத்தியிருக்கிறார் ஒரு ஓவிய ஆசிரியர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டை ஊரைச் சேர்ந்த  சு. செல்வம் அவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் தன்னுடைய உடலில் நீர்வண்ணத்தை ஊற்றிக்கொண்டு தூரிகை பயன்படுத்தாமல் தன் உடம்பையே தூரிகையாக்கி, கீழே இருக்கும் பதாகையில் படுத்து, உருண்டும் புரண்டும் நெளிந்தும் உதயநிதி ஸ்டாலின் படத்தை ஒருமணி நேரத்தில் வரைந்து நூதன முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளார். அப்பகுதி பொதுமக்கள் அந்த ஓவியத்தையும் செல்வம் திறமையும் வியப்பாக பார்த்து பாராட்டினார்கள்.