கோவில் நில விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்..!!

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவில்களின் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

கோவில் நில விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்..!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவில்களின் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார்.

அதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மும்முரமாக ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களின் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

முதல்கட்டமாக, 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் குறித்த விவரங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன. இந்த விவரங்களை www. hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.