தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட கோவில்கள் !!

தமிழக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பிரசித்தப்பெற்ற கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட கோவில்கள் !!

கொரோனாவுக்கு இடையே ஒமிக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பொங்கல், தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பெருந்திரளாக கோவில்களுக்கு படையெடுக்கக்கூடும் என்பதால் நாளை முதல் வருகிற 18ம் தேதி வரை பக்தர்கள் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக, அறுபடை வீடுகளில் 2வது வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு  பக்தர்கள் வேல் குத்தி, காவடி எடுத்து பாதயாத்திரையாக வருவது வழக்கம். ஆனால் நாளை முதல் கோவில்களில் பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால், இன்று லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். நேர்திக்கடன் செலுத்த வந்திருந்த, பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் புனிதநீராடி விட்டு, பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  இதனால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொரோனா காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் பலரும் முன்கூட்டியே இன்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலுக்கு இடையே 15க்கு மேற்பட்ட பக்தர்களும் பறவைக்காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தனர்.