தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இரண்டு முதியவர்களால் பரபரப்பு..!

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்ற முதியவர்களால் பரபரப்பு நிலவியது.

தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இரண்டு முதியவர்களால் பரபரப்பு..!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து வந்தனர். அப்போது பூலாங்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த முதியவர் வாவாகனி, 10 லட்சம்  ரூபாய் தோப்பு குத்தகைப் பணத்தை நாகூர்கனி என்பவர் திருப்பி தர மறுத்ததாகவும் நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் காவல்துறையினரைக் கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதே போல் கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்த முதியர் ராமையா தனது இடப் பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்  தனது கோரிக்கை மனுவோடு  ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சித்தார். இந்த சம்பவங்களால் அங்கு சிறிது நேரம் பாப்பரப்பு நிலவியது.