எழும்பூர் தனியார் கம்பியூட்டர் சர்வீஸ் குடோனில் பயங்கர தீ விபத்து: கட்டிடத்தில் சிக்கியுள்ள 40 பேரின் கதி என்ன?

சென்னை எழும்பூர் உள்ள தனியார் கம்பியூட்டர் சர்வீஸ் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கிரேன் மூலம்  தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எழும்பூர் தனியார் கம்பியூட்டர் சர்வீஸ் குடோனில் பயங்கர தீ விபத்து: கட்டிடத்தில் சிக்கியுள்ள 40 பேரின் கதி என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கட்டிடத்தில்  3வது மாடியில் தேவராஜ் கம்பியூட்டர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.இதனையடுத்து தகவலறிந்து வந்த கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.2வது தளம் மற்றும் 4வது தளங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் இறக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் மீட்பு பணிகளில் குறித்து காவல்துறை இணை ஆணையர் ராஜேந்திரன் ஐபிஎஸ், துணை ஆணையர் பகலவன், உதவி ஆணையர் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்டிருக்ககூடிய இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணியை பார்வையிட்டு வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரமாக தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த விபத்தில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் 40 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.