ராணிப்பேட்டை அருகே உள்ள சுடுகாட்டில் பயங்கர தீ விபத்து..!

ராணிப்பேட்டை அருகே உள்ள சுடுகாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மின் ஒயர் எரிந்து சேதமடைந்தது.

ராணிப்பேட்டை அருகே உள்ள சுடுகாட்டில் பயங்கர தீ விபத்து..!

அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் இந்துகள்  சுடுகாடு உள்ளது. இங்கு  பகல், இரவு நேரங்களில் சமுக விரோதிகள் கஞ்சா புகைத்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் புகைத்து போட்ட நெருப்பால் அங்கிருந்த சருகுகள், மூங்கில்கள், தென்னை ஒலைகள் குப்பைகள் தீப்பற்றி பயங்கரமாக எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.