தனக்கு எதிராக தீர்மானம் போட முன்னாள் அமைச்சர்களுக்கு  எந்த அதிகாரமும் இல்லை: சசிகலா பேசிய 62-வது ஆடியோ வெளியாகி பரபரப்பு...

சசிகலாவுக்கு  எதிராக  அதிமுக மாவட்ட கழகங்கள்  சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் சசிகலா பேசிய 62-வது ஆடியோ வெளியாகியுள்ளது.  

தனக்கு எதிராக தீர்மானம் போட முன்னாள் அமைச்சர்களுக்கு  எந்த அதிகாரமும் இல்லை:  சசிகலா பேசிய 62-வது ஆடியோ வெளியாகி பரபரப்பு...

அதிமுக தொண்டர்களுடன் சசிகலா போனில் பேசும் ஆடியோ வெளியாகி அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இதனால்  கலக்கமடைந்த ஈபிஎஸ ஓபிஎஸ்   சசிகலாவுடன்  பேசிய அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கீ வருகின்றனர்.  

அத்துடன்   சசிகலாவுக்கு எதிராக  அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிலையில்  திருவண்ணாமலை சேர்ந்த அதிமுக பிரமுகர் அர்ஜூனனிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. 

இதுபோல்  திருப்பூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் கலாராணியிடம் சசிகலா பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.  தனக்கு எதிராக தீர்மானம் போட முன்னாள் அமைச்சர்களுக்கு  எந்த அதிகாரமும் இல்லை என்று  சசிகலா  கூறியுள்ளார். தன்னை அதிமுக  தொண்டரிடம் இருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.