அதிமுக பொதுக்குழு வழக்கு : நாளை விசாரணைக்கு வருகிறது !!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளையில் இருந்து 2 வாரங்களில் விசாரணை முடிவுறும் என எதிர்பார்ப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு : நாளை விசாரணைக்கு வருகிறது !!

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதோடு, ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். 

விசாரணை

தொடர்ந்து இதுதொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.  இதையடுத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதனை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

முடிவுக்கு வருமா?

தொடர்ந்து வழக்கை ஜி. ஜெயசந்திரன் விசாரிக்க தலைமை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி உத்தரவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளையில் இருந்து 2 வாரங்களில் விசாரணை முடிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.