திமுக அரசு 8 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு

கடந்த ஓராண்டில் திமுக அரசு 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திமுக அரசு 8 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு

திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக அரசு 8 சதவீத  வாக்குறுதிகள கூட நிறைவேற்றவில்லை என்றார்.

மேலும் பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை தன்னைப்போல் பொதுமக்களை சந்தித்து தெரிவிக்க முடியுமா என வினவினார். அதானியை  உலக பணக்காரராக மாற்றியதை தவிர வேற சாதனைகளை மோடி கூற முடியுமா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகி ஒருவர் இல்ல விழாவில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீமான்,திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா நடக்கையில்   சூரிய ஒளி மின் பூங்காஅமைக்கப்பட்டு வருகிறது.

மின் பூங்கா வருவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விவசாயிகளிடம் விளைநிலங்களை பிடுங்கி திட்டத்தை நிறைவேற்றுவது தவறு. விளைச்சல் இல்லாத நிலங்களில் இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.  காற்றாலை, சூரிய மின்சாரம் இவற்றை தனியார் வசம் கொடுத்துவிட்டு, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அனுஉலை, அனல் மின்சாரம் அரசே நடத்தி வருகிறது.

கல்வி, மருத்துவத்தை தனியார்வசம் ஒப்படைத்து, டாஸ்மாக்கை அரசு நடத்துவதை போல் உள்ளது. அரசின் சாதனைகளை மக்கள் தான் சொல்ல வேண்டும். முழு பக்க விளம்பரம் சொல்ல கூடாது. முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்.  

அதில் 8 சதவீதம் சாதனைகளையாவது விளக்கி சொல்ல சொல்லுங்கள். இலங்கை தமிழர்களுக்கு அரசு ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தால். சிறப்பு முகாம்கள் மற்றும் அங்கு செயல்படும் கியூ பிரிவு மூட வேண்டும். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.

எல்லா நாடுகளிலும் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் தரமானதாக இருக்கும். ஆனால் அரசு செயல் படுத்தினால் தரமற்றதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது கூறுகின்றனர். யானைகள் வாழ்விடத்தில் ரிசார்ட் அமைத்து தடுத்தால் யானைகள் ஊருக்குள் வந்து பொதுமக்களை துன்புறுத்தும்.