" தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது " - முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

" தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது " - முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் 3 அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரித்துள்ளதாவது: - 


" ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை ". 

" தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது ".

" ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன் ".

" மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன ".

என்று தெரிவித்திருந்தார்.  

இதையும் படிக்க     | " விமான கட்டணங்களை உயர்த்த வேண்டாம் " - சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்.