’ தி கேரளா ஸ்டோரி ‘ - இருமுனைகளில் தொடரும் போராட்டங்கள்..!

’ தி கேரளா ஸ்டோரி ‘ - இருமுனைகளில் தொடரும்  போராட்டங்கள்..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் தனி நபராக சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுப்படுத்தி தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடையாக இருப்பதாக பட தயாரிப்பாளர் விபுல்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை  தமிழ்நாட்டில் வெளியிட நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து பேசிய திரைப்பட தயாரிப்பாளர் விபுல்ஷா, சீமான் தமிழ்நாடு அரசை மிரட்டி படத்தை வெளியிட விடாமல் தடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் திரைப்படத்தை வெளியிட அரசு அனுமதிக்க வேண்டுமெனவும் நீதிமன்ற உத்தரவுப்படி திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். 

 இதையும் படிக்க    }  டிடிவி தினகரன் ஓ.பி.எஸ் சந்திப்பு...! இணைந்து செயல்பட முடிவு...!!

இது ஒருபுறமிருக்க , புதுச்சேரியில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டனர். 

மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி ஆகிய திரைப்படங்களை தடை செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

 இதையும் படிக்க    } மணிப்பூர் கலவரம்... "மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்?" மம்தா கேள்வி...!!