மங்கல இசை வாத்தியங்கள் ஒலிக்காததால் அமைச்சர் அதிருப்தி!

மங்கல இசை வாத்தியங்கள் ஒலிக்காததால் அமைச்சர் அதிருப்தி!

கர்ப்பிணி பெண்கள் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மங்கல இசை வாத்தியங்கள் ஒலிக்காததால் அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் கர்ப்பிணி பெண்கள் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பங்கேற்று திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூறு கர்ப்பிணி பெண்களுக்கு பூ, பழம், வளையல் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு கையேடு அடங்கிய மங்கள சீர்வரிசை தட்டினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு அட்சதை தூவி அமைச்சர் மற்றும் ஆட்சியர் வாழ்த்தினர். அப்போது நாதஸ்வரம் இசைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் அமைச்சரும் தெரிவித்து மங்கல இசை வாத்தியங்கள் ஒலிக்கும்படி தெரிவித்தார். ஆனால் ஒலி பெருக்கி வேலை செய்யாததால் மங்கல இசை இசைக்க முடியவில்லை. இதனால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர். அதன் பின்னர் வெறுமனே அட்சதை தூவிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதையும் படிக்க:"பாலியல் தொழில் குற்றமில்லை" நீதி மன்றம் அதிரடி!