பாமக கட்சியின் புதிய தலைவராகிறாரா அன்புமணி ராமதாஸ் ?

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன ...

பாமக கட்சியின் புதிய தலைவராகிறாரா அன்புமணி ராமதாஸ் ?

1970ம் ஆண்டு ராமதாசால் துவங்கப்பட்ட வன்னியர் சங்கம் 1989ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவானது. இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக ராமதாஸ் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் 1998ம் ஆண்டு முதல் ஜிகே மணி அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார்.

இந்நிலையில் பாமக தலைவராக பதவியேற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததால் ஜிகே மணிக்கு பாராட்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது. இதில் பேசிய ஜிகே மணி, பாமக சிறப்பு செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பாமக சிறப்பு செயற்குழு இன்று கூடுகிறது.

திருவேற்காடு, ஜிபிஎன் மாளிகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ராமதாசின் மகனும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்தக் கூட்டம் பாமகவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...