தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும்... எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்

தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும்... எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து  எதிர்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலொசனை நடத்தினார். அதை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி, பின்னர்  கொரோனா நோயாளிகளுக்கு  அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை  தொடர்பான விவரங்களை  மருத்துவமனை டீனிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து  செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி,ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கினால்  மட்டுமே இறப்பு  விகிதத்தை குறைக்க முடியும் என்றார். தமது ஆட்சி காலத்தில் தொற்று குறைந்து இருந்ததாகவும் தற்போது  தொற்று  பாதிப்பில்  தமிழகம் முதலிடம் வகிப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகபடுத்த அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த  எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில்  பின்பற்றப்பட்ட நடைமுறையை  தொடர்ந்தால் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறினார்.

தமிழகத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்க பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளேன். என்றும்  தான் முதல்வராக இருந்த போது எவ்வளவு ஆக்சிஜன் படுக்கைகள் இருந்ததோ இப்போதும் அதே படுக்கை வசதிகள்தான் உள்ளது இதை அரசு அதிகரிக்கவே இல்லை என குற்றச்சாட்டினார்.

இரும்பாலையில் நடைபெற்று வரும் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்த பழனிசாமி,போர்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் அரசு முடுக்கி விட வேண்டும் என்றார்,தான் முதல்வராக இருந்தபோது நாள்தோறும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டது எனவும் இதனை கடைப்பிடித்தாலேயே தற்போதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் படுக்கைகளையும் அதிகரிக்க வேண்டும் என பேசிய எதிர்கட்சி தலைவர்,32 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதியை தான் முதல்வராக இருந்த போது ஏற்படுத்தி தந்துள்ளதாகவும், கொரோனா பரிசோதனை முடிவு வர 3, 4 நாட்கள் காலதாமதம் ஏற்படுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.