மதனின் ஆடியோ ஆரம்பமே ஆபாசமாக உள்ளது.... உயர்நீதிமன்றம் கண்டனம்

மதனின் ஆடியோவின் ஆரம்பமே கேட்க முடியாத வகையில் உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதனின் ஆடியோ ஆரம்பமே ஆபாசமாக உள்ளது....  உயர்நீதிமன்றம் கண்டனம்

யூடியூபர் மதன்குமாரின் பேச்சுகளை கேட்டுவிட்டு வந்து வாதாடுங்கள் என்று மதன்குமாரின் வழக்கறிஞர் பப்ஜிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆபாசமாக பேசியது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் மதன்குமாருக்கு முன்ஜாமீன் கோரி, அவரின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மதன்குமார் சார்பாக ஆஜரான அவரது வழக்கறிஞர் பப்ஜி, சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்று கூறினார்.

காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், மதன் குமாரின்  ஆபாச பேச்சுக்கள் பெண்களை கேவலப்படுத்துவதாகவும், குழந்தைகளை கெடுக்கும் வகையிலும் உள்ளது. ஆகவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறினர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தண்டபாணி, மதனின்  ஆடியோவின் ஆரம்பமே கேட்க முடியாத வகையில் உள்ளது. அவரின் ஆபாச பேச்சுகளை கேட்டுவிட்டு வந்து வாதாடும்படி அவரது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.