குளத்தில் மிதந்த வங்கி மேலாளரின் சடலம் :  கொலையா? தற்கொலையா? - போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம குள தீர்த்தத்தில் வங்கி மேலாளரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் மிதந்த வங்கி மேலாளரின் சடலம் :  கொலையா? தற்கொலையா? - போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சிம்ம குளத் தீர்த்தத்தில்  இன்று அதிகாலை வயது 50 மதிக்கத்தக்க நபர்  உடல் ஒன்று நீரில் மிதந்து நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து, அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்த கிடந்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது இறந்த நபர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டபோது,  அவர் திருவண்ணாமலை நகர கூட்டுறவு வங்கி மேலாளர் சத்திய நாராயண மூர்த்தி என்பது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வங்கி மேலாளரின் மர்ம மரணம் குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.