தாய் வேலை செய்யும் இடத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..!

திருப்பூா் மாவட்டம் அவிநாசி அருகே சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் வேலை செய்யும் இடத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..!

அவிநாசி பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் நடராஜன் - சத்யா தம்பதியினர். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சத்யா பேருந்து நிலையம் அருகே உள்ள புக்ஸ்டோர் மற்றும் தண்ணீர் பந்தலில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சத்யா தனது மகன்  ரகுநந்தனை தான் பணிபுரியும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.  

அப்போது, அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ரகுநந்தன் அங்கு மூடாமல் இருந்த தண்ணீா்தொட்டிக்குள்  தவறி விழுந்து உயிரிழந்துள்ளான், தகவலறிந்து சென்ற காவல்துறையினா் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.