குடி போதையில் விழுந்து கிடந்த நபர் மீது ஏறி இறங்கிய பேருந்து..!

வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் குடி போதையில் விழுந்து கிடந்த நபர் பேருந்து டயரில் சிக்கி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடி போதையில் விழுந்து கிடந்த நபர் மீது ஏறி இறங்கிய பேருந்து..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் அதிகளவில் மது அருந்திய போதை ஆசாமி ஒருவர், சுயநினைவின்றி நடு வழியில் விழுந்து கிடந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த நபர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.