மணல் குவாரி மூடும் போராட்டத்தில் நடந்த தடியடி வழக்கு.....! எஸ்.எஸ். சிவசங்கர் ஆஜர்...!

மணல் குவாரி மூடும் போராட்டத்தில் நடந்த தடியடி வழக்கு.....! எஸ்.எஸ். சிவசங்கர் ஆஜர்...!

கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில்,கடந்த 2015 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு சன்னாசிநல்லூர் கிராம மக்கள், 300 பேர் போலீஸ் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் தாக்கினர். 

SC passed interim ban to shut down sand quarries in Tamilnadu

தடுக்க முயன்ற போலீசாரையும் தாக்கியதால், போலீசார் தடியடி நடத்தினர்.இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 22 பேர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல்  நீதிமன்ற நடுவர் வனஜா  முன்னிலையில் ஆஜராகினர்.இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 12ம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.

மேலும் இவ்வழக்கில் 7 பேர் ஆஜாராகாத  நிலையில் அவர்களுக்கு பிடிவாரண்டினை நீதிபதி பிறப்பித்தார்.

இந்நிலையில் தற்போது, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், 

"போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அடிக்கடி பணியின் போது உடல்நலப்பிரச்சினை ஏற்படுவது தொடர்பாக மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும், தற்போது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும், இதுவரை 280 கோடி பேர் பெண் பயனாளர்கள் இலவச பயணம் செய்துள்ளனர்", எனவும்   அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார்.

இதையும் படிக்க    }  கர்நாடகா -ல தண்ணி விட்டாலும், இந்த காண்ட்ராக்டர் தண்ணி விடமாட்டாரு போலருக்கே...!