காலநிலையால் வரும் பாதிப்பு...உச்சி மாநாட்டில் அரசு செய்ய போவது என்ன?

காலநிலையால் வரும் பாதிப்பு...உச்சி மாநாட்டில் அரசு செய்ய போவது என்ன?

தமிழக அரசின் காலநிலை மாற்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஒன்பதாம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்:

காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.  

இதையும் படிக்க: பாஜகவின் இரும்பு கோட்டையில் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை!!!

காலநிலை உச்சி மாநாடு நடைபெறும் தேதி என்ன?:

இந்நிலையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு வருகிற எட்டு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு அறிவியலாளர்களும், துறை செயலாளர்களும் உரையாற்ற உள்ளனர். அதனை தொடர்ந்து ஒன்பதாம் தேதி மாலை காலநிலை மாற்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.