தமிழகத்தில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு... நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்...

தமிழகத்தில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு... நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்...
தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் இரண்டாம் அலை படிபடியாக குறைந்து வரும் நிலையில் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொண்டால் மட்டுமே முழுமையாகக் கொரொனாவை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தொடக்கத்தில் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள தயக்கம்  காட்டவில்லை என்றாலும் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள்.  இதன் காரணமாக நாளொன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் மேலாக தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  
 
இதனால் தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி தட்டுபட்டு நிலவி வரும் நிலையில், இதனால் தடுப்பூசி மையங்களில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகிறார்கள் டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் இன்று 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால் வரிசையில் காத்திருந்தோம் ஏமாற்றத்துடன் பொது மக்கள் வீடுகளுக்கு திரும்ப கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.