மாஸ்க் சாப்பிட்டு உயிருக்கு போராடிய நாய்.... மக்களின் அலட்சிய போக்கால் விபரீதம்

முகக்கவசத்தை விழுங்கிய நாய் ஒன்று உயிருக்கு போராடிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

மாஸ்க் சாப்பிட்டு உயிருக்கு போராடிய நாய்.... மக்களின் அலட்சிய போக்கால் விபரீதம்

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவதை கட்டாயம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். 

கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம். ஆனால் மக்கள் பயன்படுத்தப்பட்ட முக கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்

இல்லையென்றால் இது மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் விலங்குகளும் இவை தொல்லையாக அமைந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சைபேரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய் ஒன்று உடல்நல குறைவால் பாதிக்கப்பட அதை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது அந்த நாய் வயிற்றில் முகக்கவசம் இருப்பது தெரியவந்தது.  இதை தொடர்ந்து நாயின் வயிற்றில் இருந்த முகக்கவசத்தை எடுக்க முடிவு செய்த மருத்துவர்கள் , நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி வயிற்றிலிருந்து முகக்கவசத்தை அகற்றினர். 

தற்போது நாய் நலமுடன் உள்ளது. ஆனால் மக்கள் பயன்படுத்தப்பட்ட முக கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் , இல்லையெனில் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.