மண்டபத்தின் மின்விசிறி விழுந்து விபத்து...ஒருவர் படுகாயம்..!

திருத்தணி முருகன் கோயில், சாமி தரிசனத்திற்காக வந்த பெண்ணின் தலைமீது மின்விசிறி விழுந்து படுகாயம்..!

மண்டபத்தின் மின்விசிறி விழுந்து விபத்து...ஒருவர் படுகாயம்..!

திருத்தணி முருகன் கோயில் மலை மீது சாமி தரிசனத்திற்காக வந்த ஆவடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் தலைமீது திருக்கோயில் மண்டப மின்விசிறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். 

மலைக் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக மலைக்கோயில் வளாகத்தில், காதுகுத்து மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் சென்னை அருகில் உள்ள ஆவடி பகுதி, கன்னடபாளையத்தை சேர்ந்த லட்சுமி(42) என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு இந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, மண்டபத்தில் இருந்த மின் விசிறி  திடீரென கீழே விழுந்ததுள்ளது. 15 அடி உயரத்தில்  இருந்து கீழே விழுந்த அந்த இரும்பு மின் விசிறி, லட்சுமியின் தலை மற்றும் கைப்பகுதியில் விழுந்ததால் படுகாயம் அடைந்தார். 

காயம் அடைந்த அவருக்கு, மலைக் கோயில் மேலே உள்ள, முதலுதவி மருத்துவர் சிகிச்சை மையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டது, அதன் பிறகு லட்சுமியின் உறவினர்கள் திருக்கோயில் அதிகாரிகளிடம் பயங்கர சண்டையில் ஈடுபட்டனர், இது போல் பராமரிப்பு இல்லாமல் மண்டப பகுதியில் மின்விசிறிகள் இருப்பதற்கு எப்படி அனுமதி செய்தீர்கள் என  லட்சுமி உறவினர்கள் சண்டையிட்டனர்.  

இதனால் மலைக்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த லட்சுமியை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் மலைக்கோயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.