உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார் !!

சாப்பாட்டில் உப்பு கூடியதால் கோபப்பட்ட 80 வயது மனிதர் தனது மருமகளைச் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார் !!

லக்னோ பகுதியில் மகன், மருமகளுடன் வசித்து வருபவர் கபூர்.  சம்பவம் நடந்த அன்று மகன் இர்ஷாத், மருமகள், சுலேமா, மகள் தஷ்மினா ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அன்று இரவு மருமகள் சுலேமா தயாரித்த  உணவில் உப்பு அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் கோபப்பட்ட கபூர் துப்பாக்கியை எடுத்து சுட்டிருக்கிறார். இதில் இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்திருக்கிறார் மருமகள். உடனே மகன் இர்ஷாத் போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு உடனே வந்த காவல்துறையினரிடம் கபூர், வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்ததாகவும், அவர்களை சுட முயற்சி செய்யும்போது மருமகள் மீது குண்டு பாய்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். விசாரணையை தொடங்குவதற்குவதற்கு முன்பே அவர் ஒப்புக் கொண்டது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்த வழியில் நுழைந்தனர் எனக் கேட்ட போது பின்வாசலைக் காட்டியுள்ளார். ஆனால் பின்வாசல் கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அவரது மகன், மகள் கூறிய ஸ்டேட்மென்டில் இருந்து பெரியவர் கூறியது முற்றிலும் மாறுபட்டு இருந்தது.இதனால் குற்றம் உறுதியாகி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருமகளை நோக்கி இவர் கத்துவதை அண்டை வீட்டார் பார்த்துள்ளனர். சொந்த மருமகளையே சுட்டுக் கொன்ற இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.