அரசு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை... கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மனு...

கொரோனா காலங்களில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவிலியர்கள் மனு

அரசு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை... கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மனு...

கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கு அரசு காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து செவிலியர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த செவிலியர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள 4800 பணியிடங்களில் மாவட்ட ஆட்சியர் நிதியின் அடிப்படையில்  பணியாற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ்களை சரிபார்த்து முன்னுரிமை வழங்க வேண்டும். MRB 2019ல் தேர்வு எழுதியவர்களுக்கு காலிப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். தற்காலிக பணியாளராக பணியாற்றும் செவிலியர்கள் ஆகிய எங்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

உள்ளிட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக செவிலியர்கள் மனு அளித்துள்ளனர். மேலும் செவிலியர்கள் சென்னையில் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த மனுக்களை கோரிக்கையாக நாங்கள் மாவட்ட ஆட்சியர் கொடுக்கிறோம் என தெரிவித்தனர்.