ரூ.320கோடி மதிப்பீட்டில் நந்தனத்தில் மெட்ரோ நிறுவனத்தின் தலைமையகம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர்..!

ரூ.320கோடி மதிப்பீட்டில் நந்தனத்தில் மெட்ரோ நிறுவனத்தின் தலைமையகம்..!

மெட்ரோ ரயில் தலைமையகம்:

சென்னை நந்தனத்தில் ரூ.320கோடியில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் ஆகியோர் திறந்து வைத்தனர். 

பிரம்மாண்ட கட்டடம்:

12 மாடிகள் மற்றும் கண்ணாடி சுவர்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் தலைமையக கட்டிடத்தில், 6 மாடிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும், 6 மாடிகள் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கும் வாடகைக்கு விடப்பட உள்ளது. 

வாடகை தளங்களும் உள்ளது:

அதிகாரிகள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான வாடகை தளம் உள்ளிட்டவை இந்த கட்டிடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கோயம்பேடு மெட்ரோ:

இதற்கு முன்னதாக சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த தலைமை கட்டடம் இரண்டாவது தலைமையக கட்டடமாக இனி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.