தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை..... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்....

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை..... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்....

கொடைக்கானல் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், கூறியதாவது.  கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இருபத்தி ஆறு பழங்குடியின கிராமத்தில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்கள் 3,363 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது என்றார்

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 15 கிராம ஊராட்சிகளில் 10 கிராம ஊராட்சிகளில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் மீதி உள்ள 5 கிராம ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு முதல் தவணையாக 5 ஆயிரத்து தொள்ளாயிரம் பேர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என கூறினார்.

இதேபோல 2936 பேர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் மூன்றாவது அலை தமிழகத்தில் இல்லை இருந்தபோதும் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டம் கூடும் இடங்களில் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் 5 மெகா கேம்ப் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இதனால் மூன்றாம் நிலை ஏற்படாமல் தடுக்க பட்டுள்ளது என்றார்.