கள்ளக்காதலனுடன் உல்லாசம்... நேரில் பார்த்த மகள்... கொன்று புதைத்த பெண்!! அதிரவைக்கும் சம்பவம்

காதலன் மீதுள்ள ஓவர் ஆசையால், தன்னுடைய 3 வயது பெண் குழந்தையை ஈவுஇரக்கமின்றி கொன்று சடலத்தை புதைத்த சம்பவம் அதிரவைத்துள்ளது.

கள்ளக்காதலனுடன் உல்லாசம்... நேரில் பார்த்த மகள்... கொன்று புதைத்த பெண்!! அதிரவைக்கும் சம்பவம்

விசாகப்பட்டினத்தில் மரிக்கவலச என்ற கிராமத்தில் வசித்து வரும் வரலட்சுமி தனது கணவர் ரமேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு 3 வயதில் சிந்துஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறது. கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் வரலட்சுமி அதே கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த தொடர்பு தகாத உறவாக மாறிவிட்டது. கணவனை பிரிந்து வாழ்வதால் வீட்டிற்கே ஜெகதீஷை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, வரலட்சுமியின் 3 வயது பெண் குழந்தை திடீரென இறந்துவிட்டாள்.  போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்படாமல், சடலத்தையும் புதைத்துவிட்டனர். 2 நாளைக்கு முன்பு, கணவனுக்கு போன் செய்து, குழந்தை இறந்துவிட்டாள், அதனால் நானே மயானத்தில் புதைத்து விட்டேன் என்று கூலாக சொல்ல மகள் இறந்த செய்தியை கேட்டு கதறி துடித்துள்ளார் ரமேஷ். இதனால் மனைவியின் மேல் சந்தேகப்பட்டு உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதே சமயம், குழந்தை இறந்ததில் அந்த ஊர் மக்களுக்கும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. வரலட்சுமியின் நடவடிக்கைகளை நேரில் பார்த்ததால், உல்லாசத்திற்கு இடையூறாக இருப்பதால் பெற்ற மகளை, அவரே கொன்றிருக்கலாம் என்று சந்தேகித்தனர். தங்களுடைய சந்தேகத்தையும் போலீசாரிடம் சொல்ல, போலீசாரும் அந்த கிராமத்திற்கு வந்து, வரலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான், கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்து புதைத்துவிட்டதாக வரலட்சுமி சொன்னார். இதையடுத்து, அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

ஆனாலும் அந்த ஊர் மக்கள் ஆவேசமடைந்துவிட்டனர். போலீஸ் ஜீப்பை வழிமறித்து ஒட்டுமொத்த கிராம மக்களும் நின்று கொண்டனர். "கள்ளக்காதலுக்காக மகளை படுகொலை செய்து வரலட்சுமியை, இங்கேயே, இப்பேவே கொன்றுவிடுங்கள், உங்களால் முடியாவிட்டால், எங்ககிட்ட அவளை விட்டுட்டு போங்க.. நாங்களே கொன்று விடுகிறோம்" என்று போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பின், பொதுமக்களை போலீசார் ஒருவழியாக சமாளித்து, சமாதானம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் உறுதி சொன்னதால், வரலட்சுமியை அழைத்து செல்ல வழிவிட்டனர். கள்ளக்காதலன் ஜெகதீஷ், வரலட்சுமி இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.