மதுக்கடைக்குள் புகுந்த அழையா விருந்தாளி...அலறியடித்து ஓடிய ஊழியர்கள்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  அருகே அரசு மதுபான கடையில் புகுந்த சாரைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுக்கடைக்குள் புகுந்த அழையா விருந்தாளி...அலறியடித்து ஓடிய ஊழியர்கள்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் அரசு மதுபானக்கடை அமைந்துள்ளது. இந்த மதுக்கடையில் எப்பொதும் கூட்டம் அதிகாமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மதுக்கடைக்கு அருகே மதுக்கூடம் இருப்பதும் மதுப்பிரியர்களுக்கு சாதகமாகவே அமைந்ததுள்ளது. அப்படி கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு சாவகாசமாக அமர்ந்து மதுகுடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு மதுபான கடையில் மாலையில் மதுபான விற்பனையை  நடை பெற்று கொண்டிருந்தது. அப்போது கடைக்கு அழையா விருந்தாளியாக வந்த சாரைப்பாம்பு ஒன்று மதுபான அட்டைபெட்டிக்குள் புகுந்துள்ளது.

இதனை கவனிக்காத ஊழியர் மது பாட்டில் எடுப்பதற்காக அட்டை பெட்டியை திறந்துள்ளார். அப்போது உள்ளிருந்த சாரைப்பாம்பு சீறியதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தலைதெறிக்கக் கடையை விட்டு வெளியே ஓடினர். மதுக்கடை மற்றும் மதுக்கூடத்தில் இருந்த மதுப்பிரியர்களும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.

மேலும் இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மதுபான கடைக்குள் புகுந்த பாம்பை அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளாது.