கள்ளச்சாரய விவகாரம்: மாநிலம் முழுவதும் தீவிர வேட்டை...2 நாடகளில் 1558 பேர் கைது!

கள்ளச்சாரய விவகாரம்: மாநிலம் முழுவதும் தீவிர வேட்டை...2 நாடகளில் 1558 பேர் கைது!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், ஆயிரத்து 558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை ஆயிரத்து 842 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ஆயிரத்து 558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேட்டையில் 19 ஆயிரம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 4 ஆயிரத்து 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் 218 லிட்டர் சாராயாம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட்...தமிழக அரசு அதிரடி நடவடிக்கை...!

நடப்பாண்டின் தொடக்கம் முதல் தற்போது வரை 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 55 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளச்சாராயம் கடத்த, பயன்டுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட ஆயிரத்து 77 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.