வேகமாக பரவக் கூடியது ஓமைக்ரான் BA4, BA5 :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை  !!

புதிய வகை ஒமைக்ரான் BA4, BA5 வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வேகமாக பரவக் கூடியது ஓமைக்ரான்  BA4, BA5 :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை  !!

வரும் ஜூலை 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 31 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னை அடையார் கஸ்தூரிபா நகரில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், 

உலக முழுவதும் கொரொனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 11 மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதேபோல தமிழகத்திலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை தடுக்க தடுப்பு நடவடிக்கை சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பாக எடுத்து வருகிறோம் என்ற அவர், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஏற்படக்கூடிய தொற்று பாதிப்பில் 50% தொற்று சென்னையில் தான் ஏற்படுகிறது என்றார். மேலும், சென்னையில் மொத்தம் உள்ள தெருக்களில் 112 தெருக்களில் 3 க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் 25 தெருக்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மட்டும் மொத்தமாக 2225 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் அதிலும் குறிப்பாக 92% பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், 8% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினர்.

வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சென்னையில் மட்டும் 3500 களப்பணியளர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்,  சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத 5 பேர் மட்டுமே தண்டையார்பேட்டை தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். சிகிச்சையில் இருப்பவர்கள் யாரும் அச்ச நிலையில் இல்லை,  அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது என்றார். 

பள்ளிகள் திறந்துள்ள நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும், அதன் பிறகு பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒரு குழந்தைக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அது மற்றவர்களுக்கும் பரவும் என்ற அவர், ஏற்கனவே முதலில் கல்வி நிலையங்களில் தான் கிளஸ்டர் பாதிப்பு கண்டறியப்பட்டது தற்போது அனைத்து இடங்களும் தொற்று பாதிப்பு முலுமையாக இல்லாத நிலையில் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார். 

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று என்பது தெரியவந்துள்ளது, இதன் மூலம் BA4, BA5 வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது என கூறினார். வரும் 10 ஆம் தேதி 31 வது 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது தடுப்பூசி சலித்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக அந்தத் தரப்பு சித்தரித்துக் கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்தார்.