"புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா" புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

"புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா" புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

வரலாற்று சிறப்பு மிக்க புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிதாக கட்டப்பட்ட 64, 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்காததைக் கண்டித்து, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ்,
திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன. மேலும் சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றத்தை திறக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.New Parliament Building Inauguration LIVE Updates धोती-कुर्ता पहनकर नए संसद  भवन पहुंचे पीएम मोदी हवन और पूजा में हुए शामिल - New Parliament Building  Inauguration LIVE Updates: PM Modi reached ...

இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுருந்த அறிக்கையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புறக்கணித்தது கடுமையானஅவமானம் மட்டுமல்ல. இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என்று கூறியுள்ளன.

மேலும், இதுத் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற திறப்பு விழாவில் நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான குடியரசுத் தலைவரை புறக்கணிப்பதன் மூலம் எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். Opposition parties boycott the inauguration of the new Parliament House,  joint statement of 19 parties released

இதுத் தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஏற்கனவே உள்ள நாடாளுமன்ற கட்டிடம் வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் புதிய நாடாளுமன்றத்திற்கு என்ன தேவை உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வெளியிட்டிருந்த அறிக்கையில், தேசத்திற்கே பெருமிதம் தரும் தருணத்தில் இந்திய குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு எதிர்ப்பினைப் பதிவு செய்வதாகக் கூறி இருந்தார்.

இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதலமைச்சர் பிஜூ பட்நாயக், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளன.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!