கடத்தப்பட்ட மனைவியை போலீசார் மீட்டுத்தரவில்லை :  காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் கணவர் போராட்டம் !!

போச்சம்பள்ளி அருகே மனைவியை மீட்டுத் தர காலதாமதம் செய்வதாக போலீசாரை கண்டித்து மத்தூர் காவல் நிலையம் முன்பு குடும்பத்தாருடன் சாலை மறியல்.

கடத்தப்பட்ட மனைவியை போலீசார் மீட்டுத்தரவில்லை :  காவல் நிலையம் முன்பு  குடும்பத்துடன் கணவர் போராட்டம் !!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த தருமதோப்பு கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் சுவிதா(18) என்பவருக்கும் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கரகூர் கிராமத்தை சேர்ந்த மாதப்பன் என்பவரது மகன் அஜித்குமார் என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
 
சுவிதாவின் தந்தை பெருமாள் பெங்களூரில் உள்ள கனகபுர தாலுக்காவில் உள்ள ஆரவள்ளி என்ற இடத்தில் கொத்தனர் வேலை செய்து வருகிறார். மகள் சுவேதாவையும் மருமகன் அஜித்குமாரையும் அழைத்து சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த நிலையில்,  கடந்த 24-ம் தேதி பெங்களூரில் இருந்த சுவிதாவை மத்தூர் அருகே உள்ள எகிலேரியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் அழகிரி என்ற இளைஞர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து அஜித்குமார் மத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 26 ம் தேதி புகார் அளித்துள்ளார். புகார் மீது போலீசார் 3 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று ஆத்திரமடைந்த அஜித்குமாரரும் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று சென்னை - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மத்தூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் கை விடபட்டது.