முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது.. காரணம் கேட்டு அதிர்ந்து போன போலீஸ்!!

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது.. காரணம் கேட்டு அதிர்ந்து போன போலீஸ்!!

நேற்று காவல் கட்டுப்பாட்டுக்கு வந்த தொலை பேசி அழைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையடுத்து முதலமைச்சர் வீட்டில் நடத்திய சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. இதனால் அந்த தொலைபேசி எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியதில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து அழைப்பு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த தட்டாண்பட்டி கிராமத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரான அந்தேணிராஜ் என்பவர் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

அவரைக் கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு தொடர்பாக தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத ஆத்திரத்தில் அந்தோணிராஜ் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தோணிராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.