விஜயகாந்துக்கு செய்த அதே சூழ்ச்சி - பேரரசு பதிவில் உள்ளது என்ன?

அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்தை சிலர் காமெடி ஆக்கிவிட்டார்கள். அதேபோல் தான் இவருக்கும்... என இயக்குநர் பேரரசின் சமூக வலைதள பதிவு கவனம் பெற்றுள்ளது.
அண்ணமலை சர்ச்சை:
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அடிக்கடி சர்ச்சையாக மாறிவிடுகிறார். ஏனென்றால் அவ்வப்போது பத்திரிகையாளர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விடுகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்ணாமலை பேசியது சர்ச்சையான நிலையில் அது குறித்து அவரிடம் கேள்விகேட்க சென்ற பத்திரிகையாளர்களை என் குரங்கு போல் என்னைச் சுற்றி தாவுகிறீகள் எனக் கேட்டது சர்ச்சையானது.
அண்ணாமலை - பத்திரிகையாளர் மோதல்:
இதேபோல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை கமலாலயத்தில் செய்தியளர்களை சந்தித்த போது அவரிடம் காயத்ரி ரகுராம் விலகல், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்ள் மற்றும் ரபேல் வாட்ச் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வேளையில் அண்ணாமலை திடீரென கோவப்பட்ட அண்ணாமலை, ஊடகங்களின் பெயரை கேட்டு அவர்களையும் ஊடகங்களையும் விமர்சித்தார். மேலும் தான் தரும் ஆதாரங்களின் அடிப்படையில் அரை மணிநேரம் செய்தி வெளியிடும்படி குறிப்பிட்ட தொலைக்காட்சியின் நிருபரிடம் வாக்குவாதம் செய்தார்.
இதையும் படிக்க: சூடுபிடிக்கும் தமிழ்நாடு சர்ச்சை - ஆளுநருக்கு ஆதரவாக வந்த பாஜக மூத்த தலைவர்
கண்டனம்:
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் அண்ணாமலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் நாகரீகமற்ற முறையில் அண்ணாமலை நடந்து கொள்வதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அண்ணாமலைக்கு கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது.
பேரரசு ஆதரவு:
இது ஒருபுறம் இருக்க பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் திரைப்பட இயக்குனரான பேரரசு அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்த நிலையில் சமீபத்தில் பதவியையும் பெற்றார். தற்போது பாஜகவின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
விஜயகாந்திற்கு நடந்தது போல..:
இயக்குனர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்த். கட்சி சார்ந்த சில பத்திரிகையாளர்களின் நடவடிக்கையால் அந்த நல்ல மனிதரை காமெடி ஆக்கிவிட்டார்கள். தற்பொழுது அதேபோல் ஒரு சில கட்சிகளின் ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் என தெரிவித்துள்ளார்'' என தெரிவித்துள்ளார்.